GoodNews:மகாராஷ்டிராவில் குறைந்த கொரோனா சற்றே ஆறுதல்

The lower corona in Maharashtra is somewhat comforting

மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 48,700 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது ஞாயிற்றுக்கிழமை பதிவான 66,191 என்று எண்ணிக்கையிலிருந்து குறைந்துள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 71,736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 524 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 65,284 ஆக உயர்ந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை  மட்டும் 834 பேர் உயிரிழந்தனர்.மும்பையில் மட்டும் 3,876  பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

திங்களன்று வைரஸைக் கண்டறிய மொத்தம் 222,475 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை 289,525 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதால் மாநிலத்தில் சோதனை ஒரு நாளில் குறைந்துள்ளது.

unknown node