வாழ்க பாகிஸ்தான் என்று கோஷமிட்ட நபர்.! கைது செய்த போலீசார்.!

கர்நாடக மாநிலம், குந்தாபுரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று வழக்கம் போல பணிகள் தொடங்கியது. அப்போது பார்வையாளராக அங்கு வந்திருந்த ராகவேந்திரா கனிகி என்ற நபர் திடீரென பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டுள்ளார். பின்னரே இதனை கண்ட ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோஷமிட்ட அந்த நபரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அவர் பல நாட்களாக மனநலம் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025