அதானி குழும விவகாரம்.! செபிக்கு 3 மாத கால அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்.! 

Adani Group

அதானி குழும விவகாரம் தொடர்பான விசாரணை நடத்த செபிக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக பணக்காரர்களின் மிக முக்கியமானவராக உயர்ந்து வந்த இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் பங்குச்சந்தையை அதானி குழுமம் முறைகேடாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.

இந்த ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும பங்குகள் வெகுவாக சரிந்து உலக பணக்காரர் வரிசையில் இருந்து வெகுவாக சரிந்தார் அதானி. இதனை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. முதலில் தனியார் நிறுவன செயல்பாட்டில் தலையிட மறுத்த உச்சநீதிமன்றம், பின்னர் அதில் முதலீடு செய்து இருப்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்து சாமானிய மக்கள் என்றும், பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது இந்திய பங்குச்சந்தையை பாதிக்கும் என்ற வாதங்களை ஏற்று விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்தது.

தற்போது , இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபியானது அதானி குழுமம் தொடர்பாகவும், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாகவும் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்