ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #WhatsappNewPolicy ஹேஷ்டேக்..!

WhatsApp users commented on Twitter under the hashtag #WhatsappNewPolicy as WhatsApp changed its Privacy Policy

வாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது. அது என்னவென்றால் ” WhatApp is updating its terms and privacy policy” என்ற வரிகள் உள்ளது. வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இதற்கு பயனாளர்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும். நீங்கள் பின்னர் ஓகே செய்கிறேன் என இருந்தாலும் வரும் பிப்ரவரி 8 -ஆம் தேதிக்குள் இதை நீங்கள் செய்தாக வேண்டும். அவ்வாறு ஏற்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும். கடந்த ஆண்டு Facebook,  வாட்ஸ் அப்பை வாங்கியது. அதன் பின் வாட்ஸ் அப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அதில் ஓன்று தற்போது வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வாட்ஸ்அப் தனது Privacy Policy மாற்றி அமைத்ததால் வாட்ஸ்அப் பயனாளிகள் ட்விட்டரில் #WhatsappNewPolicy  என்ற ஹேஷ்டேக் கீழ் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.