தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று எழுந்து அழுத பெண்…! அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…!

தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று எழுந்து அழுத பெண்.
மத்தியபிரதேசம், பரமத்தியில் உள்ள, முடலே என்ற கிராமத்தில் உள்ள சகுந்தலா கெய்க்வாட் என்ற 76 வயது பெண்மணிக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது வீட்டின் தனிமை படுத்தப்பட்டார். ஆனால் அவரது நிலைமை மோசமடைந்ததையடுத்து குடும்பத்தினர் அவரை பரமத்தியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்பெண் தனியார் வாகனத்தின் மூலம் பரமத்தியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்பதாகவே. காரில் காத்திருந்த போது அவர் மயக்கமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அசைவுகள் இல்லாததால், இறந்துவிட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதனை அடுத்து, அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று தகனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அவரது இறுதி சடங்கிற்கு உறவுகள் வருவார்கள் என்பதால் குளிர் சாதனப்பெட்டியில் அவரை வைத்து இருந்துள்ளனர். அப்போது திடீரென்று அந்தப் பெண் எழுந்து அழ ஆரம்பித்துள்ளார். அதன் பின் கண்களைத் திறந்து பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் பரமதியின் முடலே கிராமத்தில் நடந்திருப்பதை போலீஸ் அதிகாரி, சந்தோஷ் கெய்க்வாட் உறுதிப்படுத்தினார். அவர் மேலதிக சிகிச்சைக்காக, அங்குள்ள கோல்டன் ஜூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சதானந்த் காலே தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025