,

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர், அவரது கண்முன்னே சுக்குநூறாக நொறுங்கிய பைக்!

By

ஆந்திராவில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் கண்முன்னே அவரது வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய வீடியோ காட்சிகளை விழிப்புணர்வுக்காக காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். 

ரயில்வே பாதை வழியாக அமைந்துள்ள சாலையை வாகன ஓட்டிகள் கடந்தாலும், ரயில் அந்த தண்டவாளத்தில் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக கேட் போடப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பொறுமையின்றி ஏதேனும் ஒரு சிறு இடம் கிடைத்தாலும் அதற்குள் நுழைந்து ரயில் வருவதற்குள் சென்றுவிட வேண்டும் என எண்ணி விபத்துக்குள்ளாவது தற்பொழுது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்திலும் இது போன்று ரயில் கேட் போடப்பட்டிருக்கும் நிலையில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த இளைஞர் ரயில் அருகில் வந்ததும் என்ன செய்வதென்று அறியாமல் அங்கேயே நின்று விட, கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் அவரது கண்முன்னே சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. தற்பொழுது காவல்துறையினர் இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வுக்காக பதிவிட்டுள்ளார்கள்.

Dinasuvadu Media @2023