ஒரு குழந்தையுடன் சென்றிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் – சர்ச்சை பேச்சு

50-year-old woman sexually abused and murdered in UP - Controversial comment by National Women's Commission member who went to trial.

உ.பி.யில் 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – விசாரணைக்குச் சென்ற தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சர்ச்சைக் கருத்து.

கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற 50 வயது பெண், பூசாரி உள்ளிட்ட இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு, கால்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் மற்றோரு நபரை காவல்துறை தேடி வருவதாக கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அலட்சியம் காட்டியதற்காக படான் பகுதிக்கு பொறுப்பான காவலர் ராகவேந்திரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நான்கு குழுக்களை அமைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்குச் சென்ற தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி, மாலை நேரத்தில் அந்த பெண் வெளியே செல்லாமல் இருந்திருந்தால் அல்லது தன்னுடன் ஒரு குழந்தையை அழைத்து சென்றிருந்தால் இந்த நிகழ்வை தவிர்த்து இருக்கலாம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.