ஆந்திராவில் மதுக்கடைகள் இன்று முதல் ( திங்கட்கிழமை )திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் மதுபானம் மீதான தடை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் .அதில் அவர் கூறியதாவது மாநிலத்தின் வருவாய்யை அதிகரிக்க மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளோம் .நாளை முதல் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார் .
ஆனால் அதே வேளையில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது .இதன் மீது முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் .எனவே அதற்கு தடை வரி விதிக்க முடிவு செய்துள்ளோம் அதற்கான தொகை பற்றிய அறியவிப்பு விரைவில் வரும் என்றார் .
ஆந்திர அரசாங்கம் நீண்ட கால பூரண மது ஒழிப்பில் உறுதியாக உள்ளோம் என்றும் இன்று முதல் ( திங்கட்கிழமை ) அனைத்து கடைகளும் திறக்கப்படும். அதே வேளையில் ஊரடங்கில் தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் செயல்படாது என்றும் மால்களில் உள்ள மதுபானக்கடைகள் செயல்படாது .மாநிலத்தில் சுமார் 3,500 கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார் .
அதே வேளையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் .இதை மீறும் கடைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்தார் .
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…