இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்தக்கூடாது..!

இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சவுதியில் வேலை செய்யும் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் ஏற்கனவே கோவாக்ஸின் இரு தவணைகளையும் செலுத்தியுள்ளார், இருந்தபோதிலும் சவுதியில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் இல்லாத நிலையில் மீண்டும் கோவிஷீல்டு செலுத்திக்கொள்ளலாமா என்று மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்திருப்பதாவது, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்த கூடாது என்று பதில் அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025