சூரத்தில் இரண்டு வீடுகளின் பல்கனி இடிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர்.
சூரத் நகரில் உள்ள இரண்டு வீடுகளில் உள்ள பால்கனி இடிந்து விழுந்ததால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதிக மழை மற்றும் காற்று காரணமாக வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பால்கனி நிழலில் கீழே தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் நேற்று இரண்டு குடியிருப்புகளின் பால்கனியும் ஒன்றாக இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை தேடும் முயற்சியில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.வி.பால்தானியா அவர்கள் கூறுகையில், எதிர்பாராதவிதமாக இந்த வழக்கை நாங்கள் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம். முழு பிளாட் வைத்திருப்பவர்கள் வேறு இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டது, எனவே குடியிருப்புகள் காலியாக இருந்தது. பழுது பார்த்து சரி செய்வதற்கான நிலைமையில் இருந்த போதிலும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…