6வது கட்டமாக மே 12-ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி கிழக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் மற்றும் டெல்லி மேற்கு தொகுதி முன்னாள் எம்பி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி .
unknown nodeஆனால் டெல்லியின் வடமேற்கு பகுதியாக இருந்த உதித் ராஜ் தற்போது போராட்டம் செய்து வருகிறார். ஏனெனில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வடமேற்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். தற்போது வரை அந்த தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த தொகுதியை எனக்கு அறிவிக்க வேண்டும் நான் கடந்த முறை சிறப்பாக செயல்பட்டுள்ளேன் இல்லையெனில் கட்சியைவிட்டு விழகுகிறேன் என போராட்டத்தை அறிவித்து பாரதிய ஜனதா கட்சியை கதிகலங்க வைத்து உள்ளார் உதித் ராஜ்.
unknown node