குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் இங்கிலாந்து பிரதமர்

இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளார்.
வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அடுத்த ஆண்டு, டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவலில் ,இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025