Unlock 3.0- இவைக்கெல்லாம் தடை, இவைக்கெல்லாம் அனுமதி.. முழுவிபரம் இதோ!

3 ஆம் கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

3 ஆம் கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31-ம் தேதி வரை கடுமையாக இருந்தது.

அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்பொழுது 2-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்பொழுது 3-ம்  கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1 முதல் 3-ம் கட்ட தளர்வுகள் அமலில் வரும்.

இவைக்கெல்லம் அனுமதி:

யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் திறக்க அனுமதி.

சுதந்திர தினக் கொண்டாட்டம், தனிமனித இடைவெளியுடன் நடைபெற அனுமதி.

உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்.

நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவைக்கெல்லாம் தடை:

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை செயல்படாது.

மதுபானக் கூடங்கள், மெட்ரோ ரயில், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.

திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை.

சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு.

போன்ற சில தளர்வுகளை அளித்து, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

unknown node
Unlock 3.0- இவைக்கெல்லாம் தடை, இவைக்கெல்லாம் அனுமதி.. முழுவிபரம் இதோ!