உத்தர பிரதேச மாநில அமைச்சர் பல்தேவ் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி!

உத்திரபிரதேச மாநில அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக்கு கொரோனா தொற்று உறுதியானது.
உத்தர பிரதேச மாநில அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக், கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது வீட்டில் அவரே தனிமைப்படுத்திக் கொண்டார் என ஜல் சக்தி அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் அமைச்சர் கமல் ராணி வருண் மற்றும் சேதன் சவுகான் ஆகிய இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025