பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு, அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல்.!
பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு தனது இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் இழப்புக்காக, ஜில் மற்றும் நானும் எங்கள் ஆழ்ந்த மற்றும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
இந்த கடினமான நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் பிரார்த்தனைகள் உடன் உள்ளன என்று பிடன் ட்வீட் செய்துள்ளார்.