உத்தர பிரதேசம் : 34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் ...!

The state of Uttar Pradesh has an international airport worth Rs 34,000 crore.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்ட உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜீவார் நகரில் உள்ள நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த சர்வதேச விமான நிலையம் 2004 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையம் 34 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளதாகவும், இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.