குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை உத்தரபிரதேச பொறியாளர் மற்றும் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

The CBI on Friday filed a chargesheet against a junior engineer of the Uttar Pradesh Irrigation Department and his wife for allegedly sexually abusing children and spreading videos of children being abused for money.

குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பணத்திற்காக குழந்தைகளை துன்புறுத்தி எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் பரப்பியதற்காக  உத்தரபிரதேச நீர்ப்பாசனத் துறையின் ஜூனியர் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பண்டாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் சுமார் 20 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்த கொடூரனின் இல்லத்தில் சோதனை  நடத்திய போது குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான  டிஜிட்டல் ஆதாரங்களின் அறிக்கைகளையும் சிபிஐ  அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது