18 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் உயிருடன் மீட்பு

Default Image

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டார். செய்யாத அந்த கொலைக்காக அப்பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஒருவருட சிறை தண்டனை அனுபவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள மலாப்பூர் கிராமத்தில் வசித்து வந்த ராகுல் கடந்த 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி தனது சகோதரியை காணவில்லை என கூறி, ஆதாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இத புகாரின் அடிப்படியில், அந்த பெண் கொலைசெய்யப்பட்டதாகவும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம், துணிகள் ஆதாரங்களாக கிடைத்ததன் பெயரில், தந்தை சுரேஷ், சகோதரர் ரூப் கிஷோர், அண்டை கிராமத்தில் வசித்து வரும் தேவேந்திரா உள்ளிட்ட 3 பேரை ஆதாம்பூர் போலீசார் 2019 பிப்ரவரி 18 அன்று கைது செய்தனர். ஒரு வருடத்திற்கு மேலாக சிறை தண்டனையும் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ராகுல், காணாமல் போன தனது சகோதரியை பவுரா கிராமத்தில் சகோதரியின் காதலரான ராகேஷின் வீட்டில் இருப்பதை அண்மையில் கண்டுபிடித்தார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மேலும், அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரர் ஆதாம்பூர் காவல்நிலைய அதிகரிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் போலீசாரால் தாக்கப்பட்டு பின்னர் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

தனது சகோதரி காணாமல் போன வழக்கை பொய்யான கொலை வழக்காக மாற்றி தனது குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட ஆதம்பூர்  காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war