வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என்று அவனிடம் கூறுங்கள்… கே.எல். ராகுல்

ஹர்திக் பண்ட்யாவின் நெருங்கிய நண்பரும், சகவீரருமான கே.எல். ராகுல், வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என அவனிடம் கூறுங்கள்’ என பகுதியில் பதிவிட்டு உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த நட்சத்திர வீரராக உருவாகி வருபவர் ஹர்திக் பாண்டியா இவர் கடந்த 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் ஹர்திக் பாண்டியா முக்கியப் பங்காற்றினார்.மேலும் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
மேலும் உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை கடைசியாக அவர் பெங்களூருவில் நடந்த தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் தான் கடைசியாக விளையாடினர்.
இந்த நிலையில் இவர் செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக திடீரென சில புதிய புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு செய்தார்.
தற்பொழுது ஊரடங்கு காரணமாக எளிய முறையில் இவர்களது திருமணம் நடந்ததாகவும் தனது மனைவி நடாஷா கர்ப்பமாக இருப்பதையும் கடந்த 2 மாதங்களுக்கு முன் உறுதி செய்தார்.
இந்த நிலையில் தற்பொழுது கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்தது, இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரரான குருணால் பாண்ட்யாவும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். அவர் தனது சகோதரனின் குழந்தையை தூக்கி பிடித்தபடி, ‘கிரிக்கெட் பற்றி நாம் பேசுவோம்’ என்ற தலைப்புடன் கூடிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
ஹர்திக் பண்ட்யாவின் நெருங்கிய நண்பரும், சகவீரருமான கே.எல். ராகுல், ‘‘வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என அவனிடம் கூறுங்கள்’’ என கமெண்ட் பகுதியில் பதிவிட்டு உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025