உத்தரகண்ட் முதல்வர் எந்த பணியும் செய்யவில்லை – டெல்லி துணை முதல்வர்

I went to Uttarakhand state and met some people there. They complained that Chief Minister Trivendra Singh Rawat was not doing any work.

நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை என்று அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு சென்ற மணிஷ் சிசோடியா, உத்தரகாண்ட் முதல்வர் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை என்று அவர்கள் புகார் கூறியதாகவும், அவர்கள் அவரை  பூஜ்ஜிய பணி தலைவர் என்று தான் அழைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

2022 உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சி அறிவித்த சில நாட்களில் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தரகாண்ட் மாநில அமைச்சர் மதன் கவுசிக் ஜி, ராவத் தலைமையிலான உத்தரகாண்ட் அரசு மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் குறித்து விவாதிப்பதற்கான தனது சவாலை ஏற்றுக் கொண்டது தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உத்தரகாண்ட் அமைச்சர் மதன் கவுசிக் ஜி இந்த சவாலை ஏற்றுக் கொண்டதோடு, அவரது அரசாங்கத்தால் செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளைப் பற்றி விவாதிக்க முன் வந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வாய்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். கலந்துரையாடலுக்கான இடத்தையும் நேரத்தையும் என்னிடம் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.