அதிரடியாக தனது கட்டணத்தை குறைத்தது வோடபோன் நிறுவனம்.. வாடிக்கையாளர்களை புருவம் உயர்த்த செய்யும் தகவல்..

இதனால் பல்வேறு நிறுவனங்களின் கட்டணமும் அதிவேகமாக அதிகரித்தது. இதில் வோடபோன் நிறுவனம் தற்போது, ரூ.24, ரூ.129, ரூ.199, ரூ.269 என்ற விலையில் 4 புதிய ப்ரீபெய்டு

இந்தியாவில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் தற்போது அலைபேசி மற்றும் இணைய  சேவைகளின் கட்டணத்தை திடீரென்று அதிகரித்தது.

இந்நிலையில் வோடபோன் நிறுவனம் அதன் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.

இதனால் பல்வேறு நிறுவனங்களின் கட்டணமும் அதிவேகமாக அதிகரித்தது. இதில் வோடபோன் நிறுவனம் தற்போது, ரூ.24, ரூ.129, ரூ.199, ரூ.269 என்ற விலையில் 4 புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல் திட்டமாக ரூ.24 திட்டம்:

இதில், 100 நிமிடங்கள் இலவச கால் (அதிலும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இதை  உபயோகிக்க முடியும்) மற்ற நேரங்களில் போன் கால் செய்தால் நொடிக்கு 2.5 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும்.

இரண்டாவது திட்டமாக.129 திட்டம்:

இதில், அன்லிமிடெட் கால், 2ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை கொண்டது. இது  14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டது.

மூன்றாவது திட்டமாகரூ.199 திட்டம்:

இதில், அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் கொண்டது. இது 21 நாட்கள் ஆயுட்காலம் கொண்டது.

நான்காவது திட்டமாக ரூ.269 திட்டம்:

இதில், அன்லிமிடெட் கால், 4 ஜிபி டேட்டா, 600 எஸ்.எம்.எஸ், கொண்டது. இது 56 நாட்கள் ஆயுட்காலம் கொண்டது.