இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா ? வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் சீனா ராணுவத்துடன் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இதனிடையே  காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில்  , 20  இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  விளக்கம் அளித்துள்ளார்.அதாவது,  லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996,2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

unknown node