கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3980 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் புதிதாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 2.30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,980 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 1.72 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடரும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றுவதை வழக்கப்படுத்தி கொள்வோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025