எதை செய்தாலும் இது நமக்கு செட் ஆகுமானு பாத்துட்டு செய்யணும்! பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய புலி! இதோ வீடியோ

In Coorg, a tiger inspects a bathtub set up for him in a coffee plantation, followed by a bathing tiger. Video goes viral on the internet.

கூர்க்கியில், ஒரு காபி தோட்டத்தில் தனக்கு குளிப்பதற்காக வைக்கப்பட்ட தொட்டியை சோதனை செய்து, அதன்பின் குளிக்கும் புலி. இணையத்தில் வைரலாகும் வீடியோ.

பொதுவாக ஆறு அறிவுள்ள மனிதர்களைப் போன்றே, ஐந்தறிவு உள்ள மிருகங்களும் சில விஷயங்களில் மிகவும் தெளிவாக செயல்படுகின்றன. எந்த ஒரு செயலை செய்தாலும், இது நமக்கு நன்மை பயக்குமா? இது சரியானதா? என்று பார்த்து செய்பவர்கள் மனிதர்கள். அதே போன்று ஒரு புலியும் தனக்கு குளிக்க வைத்திருந்த குளியல் தொட்டியை சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவில்  கூர்ப்பியில் ஒரு காபி தோட்டத்தில், புலி ஒன்றுக்கு குளிப்பதற்காக தொட்டியில் தண்ணீர் வைத்துள்ளன. அந்த தொட்டியில் குளிக்க வந்த புலி குளிப்பதற்கு முன்பாக தொட்டியை சுற்றி சுற்றி சோதிக்கிறது. சோதித்த பின் அந்த தொட்டிக்குள் இறங்கி தன்னை குளிர்வித்து கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  சமூக ஊடகங்களில் இந்த வீடியோ, பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை, இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.