நொடியில் மாறிய மாப்பிளை! தாலி கட்டியது யார்? நிகழ்ந்தது என்ன?

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும்- பாக்யஸ்ரீ என்பவருக்கும் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் நேற்று 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
தாலி கட்டுவதற்கு முன் பாக்யஸ்ரீயின் அம்மாவிடம் பேசிய மர்ம நபர் ஒருவர் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டதும் மாப்பிள்ளை வீட்டாருக்கும்- பெண் வீட்டாருக்கும் மண்டபத்தில் சண்டை காரசார பேச்சி நடைபெற்றது. தொடர்ந்து போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி அவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்வது தெரிய வந்தது.
இதனால் சோகத்துக்குலுள்ளான பெண்ணின் தந்தை மண்டபத்தில் யாராவது என் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படியாக கதறி கேட்டார்.
இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு வந்த ஆனந்த் என்னும் வாலிபர், தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பாக்யஸ்ரீயின் கழுத்தில் தாலியை கட்டினார். திடீரென ஏற்பட்ட இந்நிகழ்வால் நொடியில் மாறிய மாப்பிளை திருமணம் செய்து கொண்டது மக்கள் மத்தில் ஆசிரியத்தை ஏற்படுத்தியது .சினிமாவில் காண்பது போல் ருசிகர நிகழ்வாகவே அமைந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025