40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுபானக்கடை.! 70 % வரை கடும் விலை உயர்வு.!

டெல்லியில், அனைத்து மதுபான வகைகளுக்கும் கூடுதலாக 70 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நாடு முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில், 40 நாட்கள் நிறைவடைந்து பிறகு, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்வைத்து பிரிக்கப்பட்ட ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, டெல்லியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுபிரியர்கள் ஆர்வத்துடன் கிமீ கணக்கில் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில், அம்மாநில முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மக்கள் பாதுக்காப்பு நடவடிக்கைகளை மீறினால் ஊரடங்கு தளர்வு திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் எனவே அறிவித்தார்.
மேலும், நேற்று ஓர் சுற்றறிக்கை வெளிவந்தது. அதன்படி, அனைத்து மதுபான வகைகளுக்கும் கூடுதலாக 70 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுபாட்டிகள் விலை கடுமையாக உயரும் என கூறப்படுகிறது.