தற்போதைய காலகட்டத்தில் சாலையில் நடந்து செல்வது என்பது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய ஒரு வேலையாகவே இருக்கிறது. ஏனென்றால் வாகனங்கள் வேகமாக வந்து செல்வது ஒருபுறமிருக்க, ஆங்காங்கே சாலைகளில் சில மேடு பள்ளங்களும் காணப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பீகார் மாநிலம் பாட்டனாவை சேர்ந்த பெண்ணொருவர் சாலையில் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். அவருக்கு முன்பதாக ஒரு ஆட்டோ சென்றதால் அவர் ஆட்டோவின் பின் நடந்து சென்றுள்ளார். எனவே, கீழே இருந்த குழியை அவர் கவனிக்க மறந்து விட்டார்.
எனவே, திடீரென அந்த பெண் அக்குழிக்குள் விழுகிறார். உடனடியாக அங்கிருந்த ஆண்கள் சிலர் ஓடிவந்து விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை அக்குழியில் இருந்து தூக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node