இந்தியாவில் கொரோனா இறப்புக்கு ஆண்களை விட, பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் பெண்களை விட ஆண்கள் கொரோனாவால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா இறப்புக்கு ஆண்களை விட, பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள், இந்தியாவில் வயது மற்றும் பாலின குறிப்பிட்ட கொரோனா இறப்பு விகிதத்திற்கான ஆய்வை மேற்கொண்டனர்.
Journal of Global Health Science என்ற அமைப்பின் தலைமையில் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு விகிதத்தை வயது மற்றும் பாலின அடிப்படையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது .
கடந்த மே 20-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 66 சதவீத ஆண்களும், 34 சதவீத பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா தொற்று ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், வயதானவர்களுக்கும் (குறிப்பாக 70+ வயது) சமமாக பரவுகிறது என கூறப்படுகிறது.
இந்தியாவில் இறப்பு விகிதம் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளது என ஆய்வில் வெளியாகியுள்ளது. ஆண்களின் இறப்பு விகிதம் (உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையின் விகிதம்) 2.9 சதவீதமாக உள்ளது, ஆனால் பெண்களின் இறப்பு விகிதம் இது 3.3 சதவீதமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) உலக மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.34 சதவீதம் இருக்கும் என தெரிவித்தது. ஆனால், இது தற்பொழுது 4.8 சதவீதமாக இருக்கக்கூடும் என ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. வயதான ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் , நோய்த்தொற்று ஏற்படும்போது சிறப்பு கவனம் தேவை என்றும் ஆய்வு கூறுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…