ஹைதராபாத்:ஹைதராபாத்தில் ஒருவர் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த தனது சிக்கன் பிரியாணியில் புழு இருப்பதாக சாய் தேஜா என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த சிக்கன் பிரியாணியில் இருக்கும் ஒரு கறி துண்டில் புழு கிடப்பதை சாய் தேஜா புகைப்படங்கள் பகிருந்தார்.
ஸ்விகியில் ஆர்டர் செய்த அந்த சிக்கன் பிரியாணிக்காக ரூ.318 அவர் கொடுத்ததாகவும், இதனை குறித்து ஸ்விகியிடம் தெரிவித்த போதிலும் அவருக்கு ரூ.64 மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அன்று நடந்துள்ளது,
மேலும் பிரபலமான கடையில் இருந்து ஆர்டர் செய்த உணவில் இது போன்ற புழு கிடந்துள்ளதால் மக்கள் சற்று அதிரிச்சியில் இருந்து வருகின்றனர். மேலும், இது சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சாய் தேஜா அவரது X தளத்தில் ஸ்விகி ஊழியரிடம் பேசிய ஸ்க்ரீன் ஷாட், மற்றும் அந்த புழு கிடந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர், “தயவு செய்து மெஹ்ஃபில் குகட்பல்லி கடையில் இருந்து (Mehfil Kukatpally) ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். நான் வாங்கிய பிரியாணியில் புழு கிடந்தது, அதற்கு நஷ்ட ஈடாக ஸ்விகி எனக்கு ரூ.64 திரும்ப அளித்துள்ளது”, என பதிவிட்டிருந்தார்.
unknown node