மல்யுத்த வீரர் சுஷில் குமார் திகார் சிறைக்கு மாற்றம்....!

Wrestler Sushil Kumar has been transferred from Mandoli Jail to Tihar Jail

மல்யுத்த வீரர் சுஷில் குமார் மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்காருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், சாகர் தங்கார் பலத்த காயமடைந்தார். பின்னர், சாகர் தங்காரை அவரது நண்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சுஷில் தலைமறைவானார்.இதனால்,அவர் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இதனையடுத்து, டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை மே 23 ஆம் தேதியன்று கைது செய்தனர்.பின்னர்,இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றம் குமாரின் நீதிமன்றக் காவலை ஜூன் 25 வரை நீட்டித்தது.

இந்நிலையில்,டெல்லி காவல்துறையினர் சுஷில் குமாரை மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

சுஷில் குமார் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.