தூங்கும்போது சார்ஜ் செய்த இளைஞர்..! போன் வெடித்து உயிரிழப்பு..!

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் சார்ஜ் செய்யும் போது மொபைல் போன் வெடித்ததில் 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதே மாநிலத்தில் உள்ள நாயகர் மாவட்டம் ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த குனா பிரதான்.இவர் பரதீப்பில் பகுதியில் ஜகந்நாத் கோயில் கட்டுமான பணி தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். இந்த கோவிலை ஜெகந்நாத் டிரக் உரிமையாளர்கள் சங்கம் கட்டி வருகிறது.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் போன் சார்ஜ் செய்து கொண்ட குனா பிரதான் தூங்கிக் கொண்டிருந்து உள்ளார்.இதனால் போன் வெடித்து இறந்து உள்ளார்.குனா பிரதான் இறந்ததாக ஜெகந்நாத் டிரக் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சைலா சந்திர ஜீனா போலீசாருக்கு அதிகாலை 5 மணியளவில் தகவல் கொடுத்து உள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025