புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (அக்.16) விடுமுறை என கல்வி அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி : தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவது போல புதுச்சேரியிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில், கனமழைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த சூழலில், ஏற்கனவே, கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (16.10.2024) விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025