சீறிய காளை(யர்)களால் அதிர்ந்த அலங்காநல்லூர்.. ஜல்லிக்கட்டு..சிறப்பாக நிறைவடைந்தது..!காரை தட்டி தூக்கிய வீரர்..

Published by
kavitha
  • அதிர்ந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.
  • 660 காளைகள் மற்றும் 695 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பு என தகவல்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காளைகளும் காளையர்களும் சரி நிகராக விளையாடி வருந்த நிலையில் 35 பேர் காயமடையந்தனர்.இருவர் மாடு முட்டியதால் உயிரிழந்துள்ளனர்.

மாலை 4 மணிக்கு முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு 5 மணிவரை நீட்டிக்கப்பட்டது அவ்வாறு நீட்டிக்கட்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் பதிவு செய்யப்பட்டவர்களில் 660 காளைகள் மற்றும் 695 மாடுபிடி வீரர்கள் மட்டுமே தற்போது வரை வாய்ப்பு அளிக்கப்பட்டு பங்கேற்று விளையாடி உள்ளனர். இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் சிறப்பு பரிசு வழங்கப்பட்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது அடுத்ததாக  14 காளைகளை தழுவிய கார்த்திக் 2வது பரிசையும், 13 காளைகளை தழுவிய கணேசன் 3வது பரிசை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

19 minutes ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

34 minutes ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

56 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

3 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

4 hours ago