முதல் நாடகம்! முதல் திரைப்படம்! கலைஞர் எனும் முதல் பட்டம்! மு.கருணாநிதி நினைவுகள் 2019!

Published by
மணிகண்டன்

கலைஞர் கருணாநிதி அரசியலில் எவ்வளவு பெரிய சாணக்கியர் என்பது பற்றி நாம் அறிந்ததே. அதே போல தனது தமிழ் இலக்கியத்தை தனது எழுத்தின் மூலம் சாமானியனுக்கு கடத்தியவர் கலைஞர்.

அவர் முதன் முதலாக தனது எழுத்துக்களை கோர்த்து மக்களுக்கு படைத்த முதல் நாடகம் பழனியப்பன். இந்த நாடகம் திருவாரூரூரில் 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.

 

அதனை தொடர்ந்து 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அறிமுகமான ராஜகுமாரி படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது தனித்துவமான தமிழின் மூலம் திரையுலகில் மெல்ல மெல்ல தமிழ் திரையுலக தமிழையும் சேர்த்து வளர்த்து வந்தார் எனபதே உண்மை!

புரட்சி திலகம் எம்ஜிஆருக்கு மந்திரகுமாரி மலைக்கள்ளன் என இரு வெற்றி படங்களையும், நடிகர் திலகம் சிவாஜிக்கு முதல் படமே முத்திரை பதிக்கும் வண்ணம் வசனத்தை எழுதி இந்திய திரையுலகையே உற்றுநோக்க வைத்தார் கலைஞர். பிறகு சிவாஜிக்கு மனோகரா எனும் படத்தையும் தனது வசனத்தால் கவனிக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

 

1947 முதல் 2011 வரை சுமார் 64 திரைப்படங்களுக்கு தனது தமிழை கதை, வசனம், பாடல்கள் என தனது எழுத்து மூலம் மெருகேற்றியவர் கலைஞர் கருணாநிதி.  கடைசியாக ஸ்ரீ ராமானுஜர் எனும் நாடகத்திற்கு வசனம் எழுதுகையில் அந்த இளைஞனுக்கு வயது 92 மட்டுமே.

இது போக புத்தகங்கள் வாயிலாகவும் தனது தமிழ் வேட்கையை தீர்த்துக்கொள்ள முயற்சித்தவர் கலைஞர். இனியவை 20, கலைஞரின் கவிதை மழை என 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  நெஞ்சுக்கு நீதி எனும் தலைப்பில் தனது சுயசரிதையை குங்குமம் மற்றும் முரசொலியில் எழுதியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி எனும் நாம் கூப்பிட காரணமாயிருந்த முக்கிய நபர் நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். அவர்தான் கருணாநிதிக்கு கலைஞர் எனும் பட்டத்தை வழங்கியுள்ளார். மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்போதும் கருணாநிதியை ஆண்டவரே என்றுதான் அழைப்பாராம்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago