வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

this news given information about 1 year jail if money is paid to vote - Tamil Nadu Chief Electoral Officer Action

வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.அதில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

unknown node

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சந்தித்தார்.அதில் அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வாக்களிக்க பணம் கொடுத்ததாக 833 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 37 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.