தமிழகத்திற்கு புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை!

At present 2 lakh Govshield vaccines have arrived in Tamil Nadu from Pune.

தமிழகத்திற்கு தற்பொழுது புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் கொரோனவை ஒழிப்பதற்கு தடுப்பூசி தான் பேராயுதம் என நம்பி தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற மாதத்தில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசாங்கம் கூறியதாகவும், இன்று மாலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வரும் எனவும் தமிழக மருத்துவத்துறை அமைச்சார் மா. சுப்பிரமணியம் கூறியிருந்தார்.

அதன்படி புனேவிலிருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளதுடன், அவற்றை மாவட்டங்களுக்கு  பிரித்து அனுப்பும் பணியும் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.