புதுச்சேரியில் ஊரடங்கை மீறிய 3,001 பேர் மீது வழக்கு பதிவு.!

புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கி, வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,55,538 வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. வெளியே சுற்றிய 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 994 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 20,100 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் 3,001 பேர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025