இன்று 23வது கொரோனா தடுப்பூசி முகாம்! – 50,000 இடங்களில் தொடக்கம்!
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை வார இறுதி நாட்களில் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 23-ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கியுள்ளது.
சென்னையில் மாலை 7 மணி வரை 1,600 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை கே.கே. நகரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்க விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.