அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளர் அதிகாரம் கொடுக்கப்படுவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும்,அதன் முடிவு 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்திருந்தது .
அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் டிச.3 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,டிச.4 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதனையடுத்து,மாலை 3 மணியுடன் மனுதாக்கல் நிறைவடைந்தது.அதன்பின்னர்,இருவரும் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இதனைத் தொடர்ந்து,நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அதிகாரிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனுக்களை பரிசீலனை செய்தனர்.இதற்கிடையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மனு வாங்க வந்த தொண்டர்கள் சிலர் விரட்டப்பட்டனர்
இந்நிலையில்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயரிலேயே அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் தகுதியற்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட உள்ளது.
.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…