4 கூடுதல் டிஜிபிகள் டிஜிபியாக பதவி உயர்வு -தமிழக அரசு…!

தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சைபர் குற்றப்பிரிவு தலைவரான அமரேஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக எம்.ரவிக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு தலைவர் ஜெயந்த் முரளி டிஜிபியாக பதவி உயர்வு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் உள்ள ஏ.டி.ஜி.பி கருணாசாகருக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சைபர் குற்றப்பிரிவு தலைவரான அமரேஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025