5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகை – சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்

5.56 lakh vaccine doses have been dispatched from Pune -Tamil Nadu Health Secretary J Radhakrishnan Says today

சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள்  அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,புனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு   கொண்டு வரப்படுகின்றன. சீரம் நிறுவனத்தின் 5.36 லட்சம் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகிறது.மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.