டியூசன் முடிந்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 73 வயது முதியவர் கைது..!

சென்னை அம்பத்தூர் அம்பத்தூரில் உள்ள லெனின் நகர் , இரண்டாவது மெயின் ரோட்டில் ஒரு தம்பதிவசித்து வருகின்றனர்.அவர்களுக்கு 6 வயதிலும் , 10 வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 30-ம் தேதி மலை டியூசன் சென்றுள்ளனர்.
டியூஷன் முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தன.அப்போது லெனின் நகர், 10 வது மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி (73) .
இவர் 10 வயது சிறுமியை அழைத்து தனியாக பேசியுள்ளார். அப்போது கன்னத்தில் முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அச்சிறுமியை சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் சுந்தரமூர்த்தி அந்த சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர் அந்த சிறுமியை மீட்டு அவரை வீட்டில் ஒப்படைத்தனர். அந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையெடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுந்தரமூர்த்தி கைது செய்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025