, ,

தமிழகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பு..!

By

தமிழகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில்,  34,41,360 ஆண்களும்,  38,89,715 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 227 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 19,09,646 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14,25,786 பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் 26,86,932 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 12,97,693 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,245 பேர் என தெரிவித்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளி பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியிட்டுள்ளது. மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1,38,698 பேர் பதிவு செய்துள்ளனர்.  இதில், ஆண்கள் 92,010 பேரும், பெண்கள் 46,688 பேரும் பதிவு செய்துள்ளனர்.

கை, கால் குறைபாடுடையோர் மொத்தம் 1,07871 பதிவு செய்துள்ளனர். அதில், 70909 ஆண்களும், 36,962 பெண்களும் பதிவு செய்துள்ளனர். விழிப்புலனிழந்தோர் மொத்தம் 16,937 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 11,668 ஆண்களும், 5,269 பெண்களும் பதிவு செய்துள்ளனர். காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,890 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 9,433 ஆண்களும், 4,457 பேர் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

GO

Dinasuvadu Media @2023