தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்து.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக தமிழகம் இருப்பதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்காரணமாக, தமிழக தொழில் துறை சார்பில் ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் தலைமை செயலகத்தில் கையெழுத்தாகியுள்ளது.
அதில் 5 திட்டங்கள் நேரடியாகவும், எஞ்சியுள்ள 3 திட்டங்கள் காணொலி காட்சி மூலமாக முதல்வர் கையெழுத்திட்டார். இதன்மூலம் 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்தது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…