அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள்-அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜன் தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது ,எனவே அவற்றிற்கு உடனடியாக நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று எழுப்பினார்.இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார்.அதில், தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.மேலும் உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்.அதில்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025