தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா..பாதிப்பு 834 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 738

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 738 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக தான் உள்ளது என்றும் 27 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளார்கள்  என்று கூறியுள்ளார்.

unknown node

இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 59,918 பேரும், அரசு கண்காணிப்பில் (கொரோனா வார்டு) 211 பேர் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 7,267 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 834 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 32, 796 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் 1480 பேர் டெல்லி சென்று வந்தவர்களில் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 763 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

unknown node