ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காராப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(22). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது புவனேஸ்வரன் மனைவி கர்ப்பமாக உள்ளார். புவனேஸ்வரன் மனைவியின் தங்கை மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பள்ளி கோடை விடுமுறைக்காக மே மாதம் புவனேஸ்வரன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மனைவியின் தங்கை என்று கூட பார்க்காமல் மாலாவிற்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் கொடுமை செய்துள்ளார். அங்கு மாலா பத்து நாட்கள் தங்கியிருந்த நிலையில் பலமுறை வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாலா விடுதியில் தங்கி உள்ளார்.
அப்போது மாலாவின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதை கவனித்த விடுதி காப்பாளர் மாலாவை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனே மாலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தனது அக்காவின் கணவர் புவனேஸ்வரன் தான் இதற்கு காரணம் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாலாவின் தாய் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…