டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.18ல் திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு. வேளாண் சட்டங்களி திரும்பப் பெறக் வலியுறுத்தி, கடந்த 19 நாட்களாக, அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப் படுத்தி வருகிறது.
நாட்டு மக்களின் உணவுரிமைகளையும், வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கண்ணியமாகப் போராடி வரும் விவசாயிகளை அவமதித்திடும் வகையில், அந்தப் போராட்டத்தில் “மாவோயிஸ்டுகள்” புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மண்ணை பேசியிருப்பதற்கும், மத்திய அமைச்சர்கள் பலரும் இது போன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும், தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவசாயிகளின் போராட்டத்தை அவமதித்து வரும் மத்திய பா.ஜ.க அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல், மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் இருக்கும் முதல்வர் பழனிச்சாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது. போராடி வரும் விவசாயிகளுக்காக, திமுக தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசை மற்றும் மாநில அரசை கண்டித்தும், வரும் 18 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…