பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த வில்லேஜ் விஞ்ஞானி! விவசாயத்தை காக்க புதிய கண்டுபிடிப்பு!

By

நெல்லையில் விவசாயத்தை காக்க புதிய கருவியை உருவாக்கிய வில்லேஜ் விஞ்ஞானி!

விவசாய நிலங்களை, காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக நெல்லையை சேர்ந்த தமிழழகன்(32) என்பவர் சோளக்கொல்லை பொம்மை வடிவில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.

தமிழழகன் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாழ்ந்து வருகிறார். அந்த பகுதியில் அத்தியாவசிய வேலை என்றால் அது விவசாயம் தான். மேற்கு தொடர்ச்சி காட்டு பகுதியில் உள்ள விலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து நாசமாக்குவதை தடுப்பதற்காக இந்த கருவியை கண்டுபிடித்துள்ளதாக தமிழழகன் கூறுகிறார்.

மேலும் விவசாய நிலங்களை விலங்குகளிடமிருந்து காப்பதற்காக மின்வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் சில சமயங்களில் மனிதர்களே தெரியாமல் சென்று அதில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. அதனை தவிர்ப்பதற்கு இந்த கருவிகள் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த கருவியில் விலங்குகள் வருவதை அறிவதற்காக சென்சார் மற்றும் அதனை துரத்துவதற்கு பல வகையான வாய்ஸ் ரெகார்ட்கள் ப்ரோக்ராம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

படித்தால் தான் விஞ்ஞானியா? பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்த வில்லேஜ் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Dinasuvadu Media @2023