இனி ஆதார் கட்டாயம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.!

The Tamil Nadu Civil Service Selection Board has announced that hall tickets can be downloaded only if there is an Aadhar number.

இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர, உதவி ஆணையாளர், துணை பதிவாளர், உதவி இயக்குநர், மாவட்ட அலுவலர் போன்ற பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே TNPSC ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குனர் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஆதார் எண்ணை இணைத்த பிறகே ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

unknown node